Jul 8, 2015

ரிசர்வ் வங்கி கவர்னர் கேள்வி கேட்டு அசத்திய பள்ளி மாணவன்

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் கேள்வி கேட்டு அசத்தினான். மும்பையில் பள்ளி மாணவர்கள் மத்தியில், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பேசினார். பல மாணவர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். அப்போது எட்டாம் வகுப்பு படிக்கும் ரஜஸ் என்ற மாணவன் எழுந்து, இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்றத்தா
ழ்வு உலக பொருளாதாரத்தை பாதிக்கும் நிலை எப்போது வரும் என கேள்ளி கேட்டான். இந்த கேள்வியை கேட்டு அசந்து போன, ரகுராம் ராஜன், மாணவனுக்கு பாராத்து தெரிவித்து விட்டு பேசுகையில், ரஜஸ் வளர்ந்து பெரியவனாகி, ஆர்.பி.ஐ., கவர்னராக இருக்கும் போது எடுக்கும் கொள்கை முடிவுகள் நிச்சயம் உலக பொருளாதாரத்தை எதிரொலிக்கும். அப்போது இந்திய ரூபாயின் மதிப்பும் அதிகமாக இருக்கும். அப்போது இந்திய பொருளாதாரம் உலகில் முக்கிய பொருளாதார நாடுகளின் 2வது அல்லது 3வது இடத்தில் இருக்கும் என கூறினார்.

Share

& Comment

 

Copyright © 2015 learnerkey

Designed by Templateism. Hosted on Blogger Platform.