Oct 2, 2015

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வு: இணையம் மூலம் விண்ணப்பிக்கும் முறை

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.2016 மார்ச்சில் நடைபெற உள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், சிபிஎஸ்இ அமைப்பின் இணையதளமான www.cbse.nic.in என்ற இ
ணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.


அதேபோன்று, இந்தப் பொதுத் தேர்வுகளில் தங்களது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ள விரும்புவோரும் இணையத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை இ-செலான் மூலம் செலுத்த வேண்டும். தாமதக் கட்டணம் இன்றி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 15 ஆகும். இணையம் மூலம் விண்ணப்பிப்பது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1800-11-8002 என்ற எண்ணில் காலை 9.30 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்கள் அழைக்கலாம். சிபிஎஸ்இ பள்ளிகளின் மூலம் 2016 மார்ச்சில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்யும் பணி செப்டம்பர் 2-ஆம் தேதி தொடங்கியுள்ளது. பள்ளிகளின் மூலமாக இந்த விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

Share

& Comment

 

Copyright © 2015 learnerkey

Designed by Templateism. Hosted on Blogger Platform.