Oct 1, 2015

டிசம்பர் தேர்வுக்கு கடைசி தேதி: சென்னை பல்கலை அறிவிப்பு

சென்னைப் பல்கலை தொலைநிலைக் கல்வியில், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கு, டிசம்பர் மாதம் நடக்கும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, சென்னை பல்கலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தொலை நிலைக் கல்வியில்,
டிசம்பரில் தேர்வு எழுத விரும்புவோர், கண்டிப்பாக,'ஆன் - லைனில்' பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதோருக்கு தேர்வு எழுத அனுமதி இல்லை.
வரும், 7ம் தேதி வரை அபராதம் இல்லாமல் விண்ணப்பிக்கலாம்; அக்., 14ம் தேதி வரை அபராதத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.வங்கியில், தேர்வுக் கட்டணம் செலுத்திய பிறகு, விண்ணப்ப நகலை கண்டிப்பாக பல்கலையில் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Share

& Comment

 

Copyright © 2015 learnerkey

Designed by Templateism. Hosted on Blogger Platform.