Oct 5, 2015

சிபிஎஸ்சி தேர்வு: இணையம் வழியே தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

சிபிஎஸ்சி தேர்வு எழுதவிரும்பும் தனித்தேர்வர்கள், இணையம் வழியே விண்ணப்பங்களை செலுத்தலாம்.
இது குறித்து மத்திய மேல்நிலைக்கல்வி வாரியம்(சிபிஎஸ்சி)வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிபிஎஸ்சி-இன் சார்பில் 2015-16-ஆம் ஆண்டுக்கான 10,12-ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வு வருகிற 2016-ஆம்
ஆண்டில் நடக்கவுள்ளது. இந்த தேர்வில் பங்கேற்கவிரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்துஇணையம் வழியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மதிப்பெண்ணை உயர்த்திக்கொள்ளவிரும்பும் மாணவர்களும் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை மின்-பற்றுச்சீட்டு அல்லது வங்கிகேட்போலை மூலம் செலுத்தலாம். அபராதம் இல்லாமல் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.15-ஆம் தேதிகடைசிநாளாகும்.
மேலும் விவரங்களுக்கு www.cbse.nic.in  என்ற இணையதளத்தை காணலாம் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

Share

& Comment

 

Copyright © 2015 learnerkey

Designed by Templateism. Hosted on Blogger Platform.