Feb 3, 2016

6 - 11 வகுப்புகளுக்கு ஆண்டு தேர்வு அறிவிப்பு


தமிழக பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான வுகுப்புகளுக்கு, ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்., 21ல், அனைத்து தேர்வுகளும் நிறைவடைகின்றன.இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.



அதன் விவரம்:
*பிளஸ் 1 வகுப்புக்கு, மார்ச், 11ல் தேர்வு துவங்கி மார்ச், 31ல் முடிகிறது
* 6ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரையிலான ஆண்டு தேர்வு, ஏப்., 5ல் துவங்கி, ஏப்., 21ல் முடிகிறது
* 9ம் வகுப்புக்கான அறிவியல் செய்முறை தேர்வை, மார்ச், 25க்குள் முடிக்க உத்தரவிடப் பட்டுள்ளது
*பிளஸ் 2வுக்கு, செய்முறை தேர்வை, பிப்., 5ல் துவங்கி, 25க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது
*10ம் வகுப்புக்கும், பிப்., இறுதிக்குள் செய்முறை தேர்வை முடித்து, மதிப்பெண் பட்டியல் தர அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 15ல் துவங்கி ஏப்., 13ல் முடிகிறது.

Share

& Comment

 

Copyright © 2015 learnerkey

Designed by Templateism. Hosted on Blogger Platform.